×

ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழாவையொட்டி சாலை சீரமைப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை, செப்.10: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை உலக புகழ் பெற்ற சேக்தாவூது ஆண்டவர்தர்கா வளாகத்தில் உள்ள ஆற்றாங்கரை பாதுஷா ஆண்டவர்தர்காவின் 524-ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 24,25,26ம் தேதி நடைபெறுகிறது. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் தர்காவிற்கு செல்லும் சாலை படுமோசமான நிலையில் இருந்தது. இதனை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் பக்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் தர்கா டிரஸ்டிகளின் கோரிக்கையை ஏற்ற திருவாரூர் கலெக்டரின் உத்தரவுப்படி முத்துப்பேட்டை ஒன்றிய நிர்வாகம் சில தினங்களாக பணிகள் மேற்கொண்டு சாலையை சீரமைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தர்கள் கலெக்டருக்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Jambuvanodai Dargha Khanduri Festival ,
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...