×

வடுவூர்கோதண்டராமர் கோயிலில் ஆவணி திருமஞ்சனம் திரளான பக்தர்கள் தரிசனம்

மன்னார்குடி, செப். 10: வடுவூர் கோதண்டராமர் கோயிலில் நடைபெற்ற ஆவணி திருமஞ்சன நிகழ்ச்சியில் திரளான பகதர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான கோதண்டராமர் கோயில் தமிழகத்தில் உள்ள ராமர் கோயில்களில் தனிச் சிறப்பு பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் 48 நாட்கள் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆவணி மாத திருமஞ்சனம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள ஹயக்கிரீவர் சன்னதி முன்பு கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சேநேயர், சந்தான கோபாலன் ஆகிய சுவாமிகளை எழுந்தருள செய்து பால், மஞ்சள், தயிர், சந்தனம், திர விய பொடிகள், பஞ்சாமிர்தம் மற்றும் தேன் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு மாலையணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி திருமஞ்சனம் நடைபெறும் 48 நாட்களும் சுவாமிகளுக்கு கவசம் அணிவிக்காமல் வஸ்திரங்கள் மற்றும் மாலைகள் மட்டுமே அணி விக்கப்படும்.

Tags : Avani Thirumanganam ,
× RELATED உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு