×

திருவாரூர் நேதாஜி சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க வர்த்தகர்கள், மக்கள் எதிர்ப்பு

திருவாரூர், செப். 10: திருவாரூர் நேதாஜி சாலையில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக இயங்கி வந்தன. இந்நிலையில் இந்த கட்டிடமானது தற்போது சேதம் அடைந்திருப்பதால் நகராட்சி சார்பில் அதனை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளும் தற்போது காலி செய்யப்பட்டுள்ளது. அதில்ஒரு கடை பழைய தஞ்சை சாலையிலும் மற்றொரு கடையானது திருவாரூர் நேதாஜி சாலையிலும் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

இந்த நேதாஜி சாலையில் அதிக வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ,சினிமா தியேட்டர் மற்றும் வங்கிகள் ,கால்நடை மருத்துவமனை, அரசியல் கட்சி அலுவலகம் என அனைத்தும் இருந்து வரும் நிலையில் இந்த சாலையானது எப்போதுமே போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகவே இருந்து வருகிறது. மேலும் திருவாரூர் நகரில் இயங்கிவரும் பள்ளி கல்லூரிகளுக்கும் இந்த சாலையே மாணவ, மாணவ மாணவிகள் செல்வதற்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.அதன்படி பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ-மாணவிகள் வர்த்தகர்கள் என பலரும் இந்த சாலையை தினந்தோறும் கடந்து செல்லும் நிலையில் இதுபோன்று இந்த சாலையில் டாஸ்மாக் கடை அமைப்பது என்பது பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் குறிப்பாக வர்த்தகர்களுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும்.இதனால் இந்த சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Traders ,task shop ,Netaji Road ,Thiruvarur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...