×

கோவிலூர் அரசு பெண்கள் பள்ளியில் இண்ட்ராக்ட் மாணவிகள் பதவியேற்பு

முத்துப்பேட்டை, செப்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இண்ட்ராக்ட் மாணவிகள் பதவியேற்பு நிகழ்ச்சி தலைவர் சாவித்திரி தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் சிதம்பர சபாபதி முன்னிலை வகித்தார். முன்னதாக செயலாளர் மாணிக்கவள்ளி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை உமாமகேஸ்வரி அறிக்கை வசித்தார். இதில் புதிய தலைவராக சப்ரின் பானு, செயலாளராக சஹீதா, பொருளாளராக யாழினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். மேலும் உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.
இதில் மாவட்ட தலைவர் மெட்ரோமாலிக், மண்டல தலைவர் கோவிரெங்கசாமி, செயலாளர் பத்மநாபன், உட்பட ஆசிரியை பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பாராட்டி பேசினர்.

Tags : Govilur Government Girls School ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள்