சிறப்பு குறைதீர் கூட்டம்

பாபநாசம், செப். 10: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஆதனூர் ஊராட்சி மருத்துவக்குடியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திக்கேயன், வட்ட வழங்கல் அலுவலர் சீமான், துணை தாசில்தார் விநாயகம், கபிஸ்தலம் ஆர்ஐ விநோதினி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு பங்கேற்றனர். முகாமில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பயனாளிகளிடமிருந்து 68 மனுக்கள் வரப்பெற்றன. பயனாளிகளிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

Tags : grievance meeting ,
× RELATED நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்