×

விரைந்து சீரமைக்க வலியுறுத்தல் குப்பைகளை சேகரித்து லாரிகளில் உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லும் டிரைவர்கள்

கும்பகோணம், செப். 10: கும்பகோணம் நகராட்சியில் உள்ள 45வது வார்டுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து லாரிகளில் ஏற்றி கொண்டு கரிக்குளம் அருகில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள் கும்பகோணம் நகரத்திலிருந்து 5 கிலோ மீட்டர்தூதுாரம் வரை பயணம் செய்கிறது. ஆனால் குப்பை ஏற்றி செல்லும் லாரிகளில் குப்பைகளை மூடாமல் செல்வதால் குப்பைகள் கழிவுகள், உணவு கழிவுகள் என பல்வேறு கழிவுகள் வாகனம் செல்லும் வேகத்தில் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுந்து விடுகிறது. பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவசரமாக செல்லும்போது அவர்கள் மீது கழிவுகள் பட்டு உடைகள் நாசமாகி விடுவதால் வேறு வழியின்றி அப்படியே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மணல், குப்பைகளை வாகனங்களில் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தார்ப்பாயால் மூடி எடுத்து செல்ல வேண்டுமென உத்தரவுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி லாரிகளில் மணல், குப்பைகளை ஏற்றி செல்கின்றனர். எனவே நகராட்சி வாகனங்களில் ஏற்றி செல்லும் குப்பைகளை மூடி எடுத்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drivers ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...