×

அரியலூர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து பொதுக்கிணறு அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப். 10: வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து பொதுக்கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தில் இருந்து நெற்குணம் செல்லும் சாலையில் அய்யனார் கோயில் அருகே பொதுக்கிணறு, மின் மோட்டாருடன் கூடிய அடிப்பம்பு உள்ளதாம். இந்நிலையில் அதனருகே புதிதாக பொதுக்கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராம மக்கள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து கிணறுகள் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு அரசு பணமும் விரயமாகும் என கருதி மாற்று இடத்தில் பொதுக்கிணறு அமைக்க வேண்டுமென வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து வேறு இடத்தில் பொதுக்கிணறு அமைக்க வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில் கை.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பிரச்னைக்கு உரிய இடத்தில் பொதுக்கிணறு அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறாராம். இதனால் ஆத்திரமடைந்த பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் பொதுக்கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : demonstration ,collector ,court ,office ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...