×

தா.பழூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தா.பழூர். செப். 10:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் இருந்து சோழன்மாதேவி செல்லும் சுமார் 5 கிமீ. தார்சாலை முற்றிலும் பெயர்ந்து காணப் படுகிறது இந்த தார் சாலை போடப்பட்டு சுமார் 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 3 வருடங்களாகவே இந்த தார்சாலை இவ்வாறு கிடப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர், அண்ணன்காரன் பேட்டை வழியாக அணைக்கரை செல்லும் பேருந்து வழித்தடம். இந்த சாலை சுமார் மூன்று வருடங்களாக முற்றிலும் பெயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுகிறது.சாலை பெயர்ந்து சரளைகளாக கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

சாலை முழுவதும் சரளைக் கல் பெயர்ந்து கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் சாலையில் சருகிக்கொண்டு விழுந்து கை, கால் மற்றும் முகங்களில் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் பொழுது பள்ளங்களில் வாகனங்கள் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மற்றும் சாலையின் ஓரங்களில் கருவேல முற்களும் உள்ளன.பல்வேறு இடர்பாடுகளில் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து இந்தசாலையை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,pit road ,Pallur ,
× RELATED பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: காயமடைந்த...