×

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வாயை கருப்பு துணியால் கட்டி இந்திய தொழிலாளர் கட்சியினர் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்,செப்.10: கோரி க்கைகளை நிறைவேற்றா த தாசில்தார்உள்ளிட்ட அதி காரிகளது சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வலியுறு த்தி, இந்தியத் தொழிலா ளர் கட்சியினர் கைகளை, வாயை கருப்புத் துணி யால் கட்டிக் கொண்டும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் வந்து, பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொ டுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க் கும் நாள்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ற்கு இந்தியத்தொழிலாளர் கட்சியின் மாநிலத் தலை வர் ஈஸ்வரன் தலைமை யில், அக்கட்சியின்தொழிற் சங்கத்தை சேர்ந்த மாவட் டத் தலைவர் அய்யாசாமி, இந்தியத் தொழிலாளர் கட் சியின் வேப்பூர் ஒன்றிய துணைத்தலைவர் திருஞா னம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சரவ ணன், மாவட்ட மாணவர ணி செயலாளர் சதீஷ்கு மார் ஆகியோர் மனு கொ டுக்க வந்தனர். அப்போது அனைவரும் நூதனமாகத் தங்கள் கைகளையும், வா யையும் கருப்புத் துணி யால் கட்டிக்கொண்டும் சட் டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் வந்து அளித் தப் புகார்மனுவில் தெரிவி த்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை கருதி மாலைநேரத்தில் 4.20க்கு வரும் அரசு பஸ்சின் பயண நேரத்தை 4.50ஆக மாற்றம் செய்யக் கோரி பல முறை கோரிக் கை மனுக்களை கொடுத் தும், போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில் லை.இதனால் சம்பந்தப்ப ட்ட பெரம்பலூர் அரசுப் போ க்குவரத்து கழகப் பொது மேலாளரின் சம்பளத்தைப் பிடித்தம் செய்து கீழப்புலி யூர் அரசுப்பள்ளி மாணவ வர்களின் எதிர்கால பயன் பாட்டிற்கு அதனை வைப் புத் தொகையாக வைத்திட வேண்டும்.
அதேபோல் கீழப்புலியூர் பகுதியில் வசிக்கின்ற ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட நமூணா வை உட்பிரிவு செய்து, தனிப்ப ட்டா வழங்கிடக்கோரி கோ ரிக்கை வைத்தும், எவ்வித நட வடிக்கையும் எடுக்காத குன்னம் தாசில்தாரைக் கண்டித்து, கடந்த ஆகஸ்டு மாதம் 27ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தியும், இந்தப்புகார் தொடர் பாக பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் குறைதீர்க்கும்பிரிவில்மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கடந்த மாதம் 27ம் தேதியன்று பெரம்பலூ ரில் நடைபெற்ற போராட்ட த்திற்கும் நடவடிக்கை எடுக் காததால் போராட்டத்திற்கா ன செலவுத் தொகையை குன்னம் தாசில்தாரின் சம் பளத்தில் பிடித்தம் செய்து, கீழப்புலியூர் ஆதிதிராவி டர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தனித் தனி காசோலையாக வழ ங்கிட வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்து ள்ளனர். இதற்காக கைக ளை, வாயை கருப்புத்துணி யால்கட்டிக்கொண்டு,கலெ க்டரிடம் நூதனமாக வந்து மனுகொடுத்ததால் நேற்று குறைதீர்க்கும் கூட்ட அரங் கம் சிறிது நேரம்பரபரப்பா கக் காணப்பட்டது.

Tags : Labor Party ,Indian ,collector ,
× RELATED பாஜவின் ஏமாற்று வேலையை யாரும் நம்ப...