×

சூரக்காட்டில் தகவல் பலகை இல்லாததால் நவக்கிரக கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அவதி

சீர்காழி, செப்.10: சீர்காழி அருகே சூரக்காட்டில் தகவல் பலகை இல்லாததால் நவக்கிரக கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இதேபோல் நாங்கூரை சுற்றி 108 வைணவத் தலங்களில் 11 கோயில்கள் அமைந்துள்ளன. இதேபோல் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயில்களுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்ல வேண்டுமானால் அந்த பகுதியில் கோயில்களுக்கு செல்வதற்கு தகவல் பலகைகள் வைக்கப்படவில்லை.
இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். பக்தர்களின் நலன் கருதி சூரக்காட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,Navagraha temples ,
× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...