×

வேளாண் அமைச்சர் அறிவுறுத்தல் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கீழ்வேளூர், செப்.10: நாகை பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். பேரணியை கல்லூரி முதல்வர் ஜெயராஜ் வகித்து தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கல்லூரில் தொடங்கிய பேரணி நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரிதிடலை வந்தடைந்தது. பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் தவறாமல் பெயர் சேர்க்க வேண்டும், வாக்களிப்பது ஜனநாயக கடமை உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வமணி மற்றும் கல்லூரி பேராசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister of Agriculture ,voter awareness rally ,
× RELATED வாக்காளர் விழிப்புணர்வு பேரணி