×

மீன்வள கல்லூரியில் சுயநிதிப்பிரிவு துவங்குவதற்கு எதிர்ப்பு மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம்

நாகை, செப்.10:நாகையில் மீன்வள கல்லூரியில் சுயநிதி பிரிவு துவங்குவதற்கு எதிராக மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நாகை முதலாவது கடற்கரை சாலையில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறனர். இந் நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள ஒரு கல்லூரியில் சுய நிதி பிரிவாக பி.எப்.எஸ்.சி (இளங்கலை மீன்வள அறிவியல்) தொடங்கப்பட உள்ளது, அதற்கான விண்ணப்பங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுயநிதி பிரிவில் பி.எப்.எஸ்.சி. பிரிவை தொடங்கப்பட்டால் எங்களை போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும், வேலைவாய்ப்புகள் குறையும், மீன்வள கல்லூரில் சுய நிதி பிரிவில் பி.எப்.எஸ்.சி. கொண்டுவரக் கூடாது, உடன் திரும்ப பெற வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பிய போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போச்சுவார்த்தையின் போது சுயநிதி பிரிவுவை தொடங்குவதை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறினர். இதையடுத்து மாணவர்கள் கல்லூரி வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags : self-financing ,College of Fisheries ,
× RELATED சுயஊரடங்கு அமலில் உள்ள நிலையில்...