×

100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வேலை வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள், யூனியன் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி ஊராட்சி செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம், கெச்சிலாபுரம் ஆகிய கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கவும், சட்ட கூலியாக ரூ.229க்கு குறையாமல் ஊதியம் வழங்கவும், மாதக்கணக்கில் ஊதியம் தராத தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் வலியுறுத்தி கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சித்தா தலைமை வகித்தார். லட்சுமி, உலகம்மாள், கனகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாதர் சங்க மாநில பொருளாளர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாதர் சங்க தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

Tags : office ,Union ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...