×

தமிழிசை கவர்னராக பதவி ஏற்பு சொந்த ஊரில் கொண்டாட்டம்

தென்தாமரைகுளம். செப். 10:  தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக   பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ளார். அதை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த   ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குலசேகர விநாயகர் கோயிலில் சிறப்பு   வழிபாடு நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் மண்டல பா.ஜனதா சார்பாக  நடைபெற்ற இந்த   சிறப்பு வழிபாட்டில் அகஸ்தீஸ்வரம் மண்டல பா.ஜனதா தலைவர் நாதன்,   மாவட்டத்தலைவர் வளையாபதி, மண்டலச் செயலாளர் கோபி, பொருளாளர் மணிக்கண்ணன்,   விவசாய அணியைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும்  ஊர்   பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags : Governor ,hometown ,Tamil Nadu ,
× RELATED சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்காக 5 மணி...