×

தேர்தலில் வாக்குச்சீட்டுகள் எரிப்பு தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க ஒருங்கிைணப்பு குழு உண்ணாவிரதம்

மார்த்தாண்டம், செப். 10: மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகளை எரித்து ஜனநாயக படுகொலையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும், வழக்கு விசாரணையை மத்திய குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க கோரியும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்த்தாண்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

 வெட்டுவெந்நி சந்திப்பில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்துக்கு, சங்க உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் ஆமோஸ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சாத்ராக், முன்னாள் துணைத்தலைவர் தங்கப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 ராஜேஷ்குமார் எம்எல்ஏ போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பிரின்ஸ் எம்எல்ஏ, குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் சாலின், திமுக ஒன்றிய செயலாளர் சிற்றாறு ரவிச்சந்திரன், மைக்கிள்குமார், மோகன்தாஸ், ஆமோஸ், சுந்தரராஜ், அருள்ராஜ், சுகுமாரன், கோபி உட்பட பலர் பேசினார். வசந்தகுமார் எம்பி போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.


Tags : Election Beekeepers Co-operative Society Coordinating Committee ,
× RELATED நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் இருவர் ைகது