×

நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐயில் உடனடி மாணவர் சேர்க்கை கலெக்டர் தகவல்

நாகர்கோவில், செப்.10 :  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நாகர்கோவில், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குமரி மாவட்ட அளவிலான உடனடி நேரடி மாணவர் சேர்க்கைக்கு 04.09.2019 முதல் 16.09.2019 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து காலியிடமுள்ள தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு  ஆண்களுக்கு 14 முதல் 40 வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.500, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Nagercoil ,Angam Government ITI ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...