×

பறக்கையில் வண்ண மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நாகர்கோவில், செப். 10: பறக்கை வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய உதவிப்பேராசிரியர் ஜீவிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பறக்கையிலுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில் மீன்வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றன. தற்போது ‘வண்ண மீன்வளர்ப்பு தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் பயிற்சி முகாம் வருகிற 23ம் மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இப்பயிற்சியின் கட்டணம் q 500 ஆகும். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் வருகிற 12, 13, 16 முதல் 20 வரை ஆகிய தேதிகளில் பறக்கை மையத்தில் முன்பதிவு செய்யலாம். இம்முகாமில் வண்ண மீன்களாகிய கப்பி, மோலி, பொன்மீன், ஏஞ்சல் மீன், ஆஸ்கர், கோய்மீன் போன்றவைகளின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி விரிவாக பாடம் நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு 04652-286107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


Tags : training camp ,
× RELATED பெரம்பலூரில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம்