×

புதிய கல்வி கொள்கையை முதன்முதலில் எதிர்த்தது விசிக ரவிக்குமார் எம்பி பேச்சு

திண்டிவனம், செப். 10: விழுப்புரம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். கருத்தங்கின் முதல் அமர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் 30வது ஆண்டில் என்ற தலைப்பில் நடந்தது. தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ற தலைப்பில் 2வது அமர்வு நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை.ரவிக்குமார் பேசுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கை ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் ஒரு முயற்சியாகும். மேலும் மத்திய அரசு கொண்டு வந்த இந்த குலக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் முதன்முதலில் விடுதலைசிறுத்தைகள்கட்சிதான் எதிர்த்தது.

பின்னர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி மக்கள் பார்வைக்கு இந்த திட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு செய்ய வழிவகுத்தது என்றார்.
இதில் மனித உரிமைகள் பண்பாட்டுக்கழக இயக்குனர் பாண்டியன்,அரசியல் குழு மாநில துணைச் செயலாளர் ஓவியர் குழுபஞ்சராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.¬¬

Tags : speech ,Vishika Ravikumar MP ,
× RELATED ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க...