வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்

சின்னசேலம், செப். 10: ரியல் எஸ்டேட் ஏஜெண்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.சின்னசேலம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(40). திருமணமாகாதவர். இவருடைய பெற்றோர் இறந்து விட்டனர். இவருக்கு 10 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இந்நிலையில் பரமசிவம் தரப்பிற்கும், பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி தரப்பிற்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரமசிவம் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சின்னசேலம் பஸ்நிலையம் நோக்கி வந்தார். அப்போது பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த வளர்மதி(40), அவரது கணவர் பொன்னுசாமி, தாய் பச்சையம்மாள், மகன் சரத் ஆகியோர் சேர்ந்து பரமசிவத்தை அசிங்கமாக திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் 4பேர்மீது வழக்கு பதிந்து வளர்மதியை கைது செய்தனர்.


Tags : Plaintiff attacks ,murder ,
× RELATED முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த...