×

இலவச மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி, செப். 10: குட் சமாரிட்டன் கல்வி மற்றும் உடல்நலன் அறக்கட்டளை சார்பில், கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரநாயக்கன்பேட்டையில் நேற்று முன்தினம்  இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை நடைபெற்றது.இம்முகாமை குட் சமாரிட்டன் கல்வி அறக்கட்டளையுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தினர். இம்முகாமுக்கு அறக்கட்டளை தலைவர் கே.பி.ஆரோன் தலைமை தாங்கினார்.  முகாமை  முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால், ஈகுவார்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்பல்லோ மருத்துவமனை மேலாளர் பிரேம் ஜேன் தலைமையில்  25 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர்  சிகிச்சை அளித்தனர்.இம்முகாமில் பொது மருத்துவம், கண், எலும்பு மற்றும் தோல் நோய்கள் மற்றும் பெண்கள் தொடர்பான உடல்நல குறைபாடுகளுக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர்.  மேலும், நோயாளிகளுக்கு  இலவச மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...