×

கடும்பாடி கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

திருக்கழுக்குன்றம், செப்.10: திருக்கழுக்குன்றம் அடுத்த கடும்பாடி கிராமத்தில் தேசிய ஊட்டசத்து மாத விழா நடந்தது.திருக்கழுக்குன்றம் அடுத்த கடும்பாடி கிராமத்தில், ‘தேசிய ஊட்டசத்து மாத விழா’ நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் ஜானகி  தலைமை தாங்கினார். அங்கன்வாடி  மேற்பார்வையாளர் நளினி வசந்தகுமாரி, அங்கன்வாடி பணியாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காய்கறிகள் மற்றும் பழங்கள், கீரைகளின் அவசியம், அவைகளின் பயன்கள்,   ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது.    மேலும், குழந்தைகளின் பல்வேறு  கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பரிசு மற்றும்  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : National Nutrition Month Celebration ,Kadumbadi Village ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...