×

திருப்போரூர் வட்டம், பொன்மார் ஊராட்சியில் இருந்து போலச்சேரி கிராமத்தை தனி ஊராட்சியாக வேண்டும்

காஞ்சிபுரம், செப்.10: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், போலச்சேரி கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர்  பொன்னையாவிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.போலச்சேரி கிராமம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது. இங்கு தற்போது 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். ஆனால், எங்கள் கிராமத்துக்கு பஸ், மருத்துவமனை, தபால் நிலையம்,  வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் என எந்த வசதியும் இதுவரை இல்லை.எங்களின் எந்த தேவையானாலும் அருகில் உள்ள பொன்மார் கிராமத்துக்கோ, மாம்பாக்கம் கிராமத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. ஒரு கிராமத்தில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் இருந்தாலே தனி பஞ்சாயத்து  அவசியம் என அரசாணை இருந்தாலும், எங்கள் கிராமத்துக்கு இதுவரை தனி பஞ்சாயத்து அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எங்களது கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் 500 குடும்பங்களே இருந்தன. ஆனால் தற்போது 100 சதவீத வளர்ச்சியடைந்து 1000 குடும்பங்களுக்குமேல் வசிக்கிறோம். இங்கு போக்குவரத்து வசதி  மற்றும் மருத்துவமனை, வங்கி, தபால் நிலையம், அரசு அலுவலகங்கள் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பொன்மார் ஊராட்சியில் இருந்து போலச்சேரி கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : village ,Thirupporeur ,Ponmar ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...