×

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செய்யூர், செப். 10: இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு நல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நேற்று கடப்பாக்கத்தில் உள்ள  பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நல்லூர் கிராம மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி திமுக கிளை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திமுக பேரூராட்சி செயலாளர் இனியரசு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், வட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

நல்லூர் பகுதியில் வழக்கு தொடர்ந்து நிறுத்தப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். குளம், குட்டைகளை தூர்வாரி  நீர் ஆதாரத்தை உருவாக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும். சுடுகாட்டில் எரிமேடை கட்டி சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளி்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், நல்லூர்  கிராமத்தை பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,bargaining administration ,facilities ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்