×

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரும்புதூர், செப்.10: பெரும்புதூர் கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் சார்பில் மழைநீர் சேகரிப்பு மரம், வளர்ப்போம், நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு  பேரணி, பெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.பெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) சுமதி வரவேற்றார். ஜேஆர்சி மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன்,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, வட்டார கல்வி அலுவலர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர், சமூக ஆர்வலர் எஸ்.ஏ.அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இதில் பெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் உள்ள 67 பள்ளிகளில்  இருந்து 341 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.பேரணியில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு, ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் உட்கொள்வது, பிளாஸ்டிக் ஒழிப்பு உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  கையில் ஏந்தி பெரும்புதூர் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rain Water Collection Awareness Rally ,
× RELATED மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி