×

இலவச மருத்துவ முகாம்

திருக்கழுக்குன்றம், செப். 10:  திருக்கழுக்குன்றம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில்  இலவச மருத்துவ முகாம் நடந்தது.திருக்கழுக்குன்றம் அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில், சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பொது சுகாதார திட்டத்தின் கீழ், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.இதில் மகப்பேறு, குடல் மற்றும் தலை, இருதயம் சம்பந்தமான சிகிச்சை, சித்த மருத்துவம் உள்பட அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதில், குழிப்பாந்தண்டலம், எச்சூர், நந்திமாநகர்,  வடகடும்பாடி, புலியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...