உலக கொசுக்கள் தினத்தை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் விநியோகம்

கம்பம் ஆக. 22: உலக கொசுக்கள் தினத்தை முன்னிட்டு கம்பம் பிலாலியா அரபிக்கல்லூரி சார்பாக கம்பம் நகரில் 5 இடங்களில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது .உலகில் முதன் முதலாக பெண் கொசுக்கள்தான் மனிதர்களை கடிக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி சர்ரெனால்ட் ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த நாளே உலக கொசுக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கொசுக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கம்பம் பிலாலியா அரபிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கே.கே.பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜ் தலைமையில் நேற்று காலை 9 மணி முதல் கம்பம் தலைமை தபால் நிலையம், சிக்னல், காந்தி சிலை, உழவர் சந்தை மற்றும் அரசு மருத்துவமனை அருகில் என 5 இடங்களில் பொதுமக்களுக்ககு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED . கண்டமனூர் அருகே ஜல்லிக்கற்கள் ...