×

சர்வதேச விருது வாங்கி தருவதாக பணம் பறிக்கும் மோசடி கும்பல் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

சர்வதேச விருது வாங்கி தருவதாக
பணம் பறிக்கும்
மோசடி கும்பல்
காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

கீழக்கரை, ஆக.20:  சர்வதேச விருது பெற்று தருவதாக ஏமாற்றி நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரவர் தனி திறமைகளை சமூக ஊடங்களில் வெளியிடுவது தற்போது வழக்கமாகி வருகிறது. இப்படி வெளியிடப்படும் தகவல்களை தொகுத்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ளும் இக்கும்பல் சர்வதேச அளவில் சாதனை விருது பெற்று தருவதாகவும் தெரிவிக்கின்றனர். முதல் கட்ட பணிகளுக்கென ரூ.5 ஆயிரம் இக்கும்பல் பெற்று கொள்கின்றனர். பின்னர் சர்வதேச பார்வையாளர்கள் பார்வையிட வருவார்கள் என கூறி மேலும் பணத்தை கறக்கின்றனர். இப்படியே பல மாதங்கள் இழுத்து பெரும் தொகையை பெற்று ஏதேனும் பெயரளவில் விருதை கொடுத்து ஏமாற்றுகின்றனர். ஏமாந்தவர்கள் அவமானத்தால் வேறு வழியின்றி வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

இதற்கென சில ஊர்களில் ஏஜெண்ட்கள் உள்ளனர். ஆள் பிடித்து கொடுத்தால் இவர்களுக்கு கமிசன் வழங்கப்படுகிறது. ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு, சில பிரமுகர்களுக்கும் இதில் கமிஷன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏமாற்றப்பட்ட பெற்றோர் கூறியதாவது, ‘‘எங்களது 4 வயது மகன் நீச்சல் குளத்தில் மிதப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தோம். இதனை பார்த்த ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு எனது மகனுக்கு சர்வதேச விருது பெற்று தருவதாக தெரிவித்தார். அப்போது செலவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் எங்களை நேரில் சந்தித்த போது ரூ.5 ஆயிரம் செலவாகும் என பெற்று சென்றார். பின்னர் பல்வேறு காரணங்கள் கூறி ரூ.60 ஆயிரம் வரை வாங்கினார். ஆனால் சர்வதேச விருது எதுவும் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களாகவே விருது ஒன்றை தந்து ஏமாற்றி விட்டனர். பணம் வாங்கியதற்கான ரசீது எதுவும் தரவில்லை. எங்களை போன்று பலரும் ஏமாற்றப்பட்டு உள்ளனர்’’ என்றனர். மாவட்ட நிர்வாகம் உன் இதுபோன்ற கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை