×

மாரத்தான் போட்டி

கோவை ஆக.20: சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் சார்பில் ‘ஐ.எஸ்.ஆர் - ரன்’ எனும் மாரத்தான் போட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி திரட்டும் பொருட்டு நடந்த இந்த மாரத்தானில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியை க்ரீன் கிரெஸ்ட் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணன் மணிகண்டன், எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, ஐ.ஜி பெரியய்யா, எஸ்.பி சுஜித் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இதில், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், கர்ப்பிணிகள் கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிர்வாகிகள் சிவநேசன் மற்றும் சசிகலா ஆகியோர் கூறுகையில், ‘‘இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட வருவாய், ‘இன்விசிபிள் கலைடாஸ் கோப்’ எனும் பார்வையற்றோருக்கு தையல் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடுமனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி திட்டத்திற்கும் வழங்கப்படும்.’’ என்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்