சுதந்திர தினத்தையொட்டி நாளை 121 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் தகவல்

பெரம்பலூர்,ஆக.14: பெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி நாளை(15ம்தேதி) கிராம சபை கூட்டங்கள் நடை பெறுகிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (15ம்தேதி) சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சி களிலும் கிராமசபைக் கூட் டம் ஊராட்சித் தனி அலுவ லர்களால் நடத்தப்பட உள் ளது.இதில் ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளி லும், கட்டி முடிக்கப்பட்டு ள்ள கழிப்பறைகளைப் பய ன்படுத்துதல் மற்றும் பயன் படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபைக் கூட் டத்தில் வாசிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிமன்றத் தனி அலுவலர்கள் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும்.

அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதைக் கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.இதில் அந்தந்த ஊராட்சிக்கு சம்மந்தப்ப்டட எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில்முறையாக நடை பெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் (கி.ஊ) பற்றாளர்களாக நியமிக்க ப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற் பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண் டு கிராமஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED கவிஞர் மருதகாசிக்கு நூற்றாண்டு விழா...