குளித்தலை அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு


குளித்தலை, ஆக. 14: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இரும்பூதிபட்டியில் ஊருக்கு வெளியில் அரசு மதுபானக்கடை உள்ளது.
இந்த மதுபான கடை அரசு விடுமுறை என்பதால் இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அருகில் இருந்தவர்கள் கடை பூட்டு உடைந்து இருப்பதை கண்டு இந்த கடையின் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பணியாளர்கள் அரசு மதுபான கடைக்கு வந்து பார்த்துவிட்டு குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடையில் பணம் இல்லாததால் பூட்டை உடைத்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த 12 மதுபாட்டில்களை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags :
× RELATED ஆவணங்களை பெற்று கொண்டு சுயஉதவி...