×

சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித் தபசு விழா

ஏரல், ஆக.14: சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலின் ஆடிதபசு விழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. முக்கிய விழாவான ஆடிதபசு விழா நேற்று நடந்தது. அதிகாலை மூலஸ்தான சுவாமி அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், யாக வேள்வி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்பாள் தபசுக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து நகர்வலம் வருதலும், பகல் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சங்கரேஸ்வரர் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறுத்தொண்டநல்லூர் மற்றும் ஏரல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது. 14ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சி அளித்து சங்கரேஸ்வரர்-கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி நகர் வலம் வருதலும் நடந்தது. இவ்விழவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து செய்து இருந்தனர். இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர், சந்துரு, செல்வசுப்பிரமணி ஆகியோர் நடத்தினர். கோயில் தலைவர் ராஜபாண்டி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு