அத்திவரதர் வைபவத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை நடக்கிறது. வைபவம் தொடங்கிய நாள் முதல் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து கடந்த 44 நாட்களில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்து சென்றனர்.பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அத்திவரதர் இன்று வயலட் நிற  பட்டு உடுத்தி  பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சயனகோலம் முடிந்து, நின்ற கோலம் 13ம் நாளான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.அத்திவரதர் தரிசனம் முடிய இன்றோடு 3 நாட்கள் மட்டுமே உள்ளதால், எதிர்வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கக் கூடும். எனவே, மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags :
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் அவலம்...