×

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி தலைமை வகித்தார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் விஜய் கணினி பயிற்சி அளித்தார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கணினி பயிற்சி மூலம் இணைய வழியாக இஎம்ஐஎஸ் மூலம் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஹைடெக் லேப் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கற்றல் செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொண்டு செல்ல உள்ளது. மாணவர்களின் வருகைப்பதிவு, மாற்றுச்சான்றிதழ் போன்றவைகளை இஎம்ஐஎஸ் மூலமாக செயல்படுத்துவது குறித்து இணையவழி மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. …

The post ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kadambatore Union Mellallathur Rasinar High School ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?