×

கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தீவிரம்

போடி : போடி அருகே கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் மற்றும் டிவைடர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிநாயக்கனூர் உள்ளது. தமிழக-கேரளா மாநிலங்களை போடி மெட்டில் இணைத்து பிரிக்கும் உயரமான முக்கிய பகுதியாகவும் உள்ளது. தேனியிலிருந்து போடி வரை 16 கிமீட்டரும், போடியிலிருந்து 26வது கிமீயிலும், 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் போடி மெட்டு மலைச்சாலை அடுக்கு மற்றும் குறுகிய சாலையாகவும் இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடியால் விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் மலைப்பகுதியில் இருந்து உருண்டு விழுந்து உயிர்பலி ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது.இதனால், இப்பகுதி மக்கள் மலைச்சாலை உள்பட சாலை முழுவதையும் விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு துவங்கி இரு கட்டங்களாக பாறைகளை உடைத்து விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பணிகள் தற்போது 80 சதவீதம் வரையில் முடிந்துள்ளது. இதில், மூணாறிலிருந்து பூப்பாறை வரையிலும் பாறைகள் உடைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பாறை துகள்கள், மண் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.அதுபோல், போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள பாறை ஓரங்களில் மண்சரிவு ஏற்படாமல் தடுக்கவும், 17 கொண்டை ஊசி வளைவுகளில் மண்ணால் ஆன தடுப்பு சுவர்களை கான்கிரீட் தடுப்பு சுவர்களாக மாற்றி அமைக்கும் பணியும் கடந்த 4 மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், போடியிலிருந்து தேனி வரையில் விரிவாக்கப்பணிகள் முடிந்து வாகனங்கள் இயங்கி வருகிறது.தற்போது போடி சாலை காளியம்மன் கோயிலிருந்து மீனா விலக்கு வரையில் முதற்கட்டமாக சாலை இருபுறங்களிலும் விரிவாக்கம் செய்து தார்ச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல், விபத்துகளை தடுக்க சாலையில் டிவைடர் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Cochin-Dhanushkodi National Highway ,Bodi ,Dinakaran ,
× RELATED பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு