×

கேரளாவிற்கு கடத்திய 14 டன் ரேஷன் அரிசி நெல் பறிமுதல்-ஆலை உரிமையாளர் கைது

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்திய 14 டன் ரேஷன் அரிசி நெல் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் தனியார் நவீன அரிசி உள்ளது. இங்கு ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியை அரைப்பதற்காக அரசிடம் ஆலை உரிமையாளர் சித்தையா ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியை அரைத்து, தமிழ்நாடு நுகர்வோர் கழகத்திடம் வழங்கி வருகிறார்.இந்நிலையில் இந்த அரிசி ஆலையில் இருந்து கேரளாவுக்கு அரிசி மற்றும் நெல் கடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் தனி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் சங்கரபாண்டியன், தனி வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், தனி வட்டாட்சியர் ராமநாதன், திருவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அரிசி ஆலைக்கு அரசால் வழங்கப்பட்ட 44 டன் உயர் ரக நெல்லில் இருந்து, 14 டன் நெல் லாரி மூலம் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில், நெல்லுடன் சென்ற லாரியை அதிகாரிகள் மடக்கினர். பின்னர் லாரியில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நெல்லை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.அதிகாரிகள் விசாரணையில், இந்த 14 டன் நெல் அரிசிக்கு பதிலாக வெளிச்சந்தையிலிருந்து தரம் குறைந்த நெல்லை கொள்முதல் செய்து, ரேஷன் அரிசியாக மாற்றி நுகர்வோர் கழகத்திற்கு வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கேரளாவிற்கு கடத்திய 14 டன் ரேஷன் அரிசி நெல் பறிமுதல்-ஆலை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Rajapalayam ,Keralla ,Rajapalayam Tenkasi ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...