×

சுத்தமா இல்லை சிமெண்ட் கருவக்குடி மின்கம்பங்களில் கம்பி மட்டும்தான் இருக்கு-உயிர் சேதம் ஏற்படும் முன் மாற்றப்படுமா?

காரியாபட்டி : நரிக்குடி அருகே கருவக்குடி கிராமத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நரிக்குடி அருகே பூம்பிடாகை  ஊராட்சிக்குட்பட்டது கருவக்குடி கிராமம். இப்பகுதியில் கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு மின்இணைப்பு  வழங்கப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தற்போது சிமெண்ட்  காரைகள் முழுவதுமாக உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. சிறு  காற்றடித்தால் கூட மின்கம்பங்கள் சாய்ந்து விடும் நிலையில் உள்ளது. இதனால்  அப்பகுதி மக்கள், அவ்வழியே நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து  கருவக்குடியை சேர்ந்த ராமர் கூறுகையில், ‘எங்கள் ஊரில் 10க்கும் மேற்பட்ட  மின்பிகள் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில்  காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை உடனே  சரிசெய்ய முடியாது. 3, 4 மாதங்கள் வரை ஆகிவிடும். அதுவரை நாங்கள் இருளிலே  வாழும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த மின்கம்பங்கள் அடியில்தான் சிறுவர்கள்  விளையாடி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் மின்கம்பங்களை மாற்ற கோரி சம்பந்தப்பட்ட மின்வாரியத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு ஆபத்தான  மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைத்து தர நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றார். கருவக்குடி அறிவுராஜன் கூறுகையில்,  ‘வீட்டிற்கு இணைப்புக்கள் கொடுக்கும் போது இந்த சேதமடைந்த மின்கம்பங்களில்  ஏற முடியாத சூழ்நிலை உள்ளதால் கீழிருந்தே உயர்ந்த கம்புகளில் வயர்களை கட்டி  கொக்கி போட்டு பயன்படுத்தும் அவல நிலையில் வாழ்கிறோம். எனவே உயிர்சேதம்  ஏற்படும் முன்பு புதிய மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை சரிசெய்ய வேண்டும்’  என்றார். …

The post சுத்தமா இல்லை சிமெண்ட் கருவக்குடி மின்கம்பங்களில் கம்பி மட்டும்தான் இருக்கு-உயிர் சேதம் ஏற்படும் முன் மாற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Karukudi ,Kariyapatti ,Karukkudi ,Narikkudi ,Dinakaran ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...