×

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் மேற்கு பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மரணக்குழி-விரைவில் சீரமைக்க தேமுதிக வலியுறுத்தல்

நெல்லை : நெல்லை  சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் மேற்கு பகுதியில் வாகன ஓட்டிகளை  அச்சுறுத்தும் வகையில் உள்ள  மரணக்குழியை விரைவில் சீரமைக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கலெக்டருக்கு அனுப்பிய மனு விவரம்: நெல்லை  மாநகர பகுதியில் பிரதானமாக திகழ்வது ஈரடுக்கு திருவள்ளுவர் மேம்பாலம். இந்த மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் தபால் நிலையம், தொலைபேசி நிலையம்,  வங்கிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மேம்பாலத்தின் மேற்கு  பகுதியில் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உருவான ராட்சத மரணக்குழியால் இதில் பயணிக்கும் வாகனஓட்டிகள் தினமும் அவதிப்படுகின்றனர். இந்த பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான  வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள்  உள்ளிட்டோர் இந்தவழியாக சென்று வந்தாலும், இந்த மரண குழி குறித்து கண்டு  கொள்ளப்படாத நிலை தொடர்கிறது.எனவே பொதுமக்களின் நலன் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த சாலையை  மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து போர்க்கால  அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் வலியுறுத்தி உள்ளார்….

The post நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் மேற்கு பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் மரணக்குழி-விரைவில் சீரமைக்க தேமுதிக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nellai Erudku ,Demudika ,Nellai ,Nellai junction ,Erudku bridge ,
× RELATED விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை...