அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது

கொடைக்கானல், ஜூலை 18: கொடைக்கானலில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள பெருமாள் மலையை அடுத்த சாம காட்டு பள்ளத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தேனி மாவட்டம் அரப்படிதேவன்பட்டி சேர்ந்த கோவில் ஆண்டி மகன் சத்யராஜ் (32) என்பவரையும், கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் பழநி பிரிவில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் உதிரியராஜ் (65), பெருமாள் மலையை அடுத்த அடுக்கம் பிரிவில் சட்டவிரோதமாக மது விற்ற தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த அன்பழகன் மகன் பாலமுருகன் (29), ஆகிய மூவரையும் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 25% இடஒதுக்கீடு கலெக்டரிடம் மனு