×

தி.பூண்டி பகுதியில் அனுமதியின்றி மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டி நகர பகுதி மற்றும் கிராம பகுதிகளில் மின்வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பங்கள் மூலம் அதிக சக்தி வாய்ந்த மின்சாரம் வீடு மற்றும் கடை உபயோகத்திற்கு மின் அழுத்த கம்பிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாடு மின் வாரியமே கம்பங்களை பராமரித்து வருகிறது.ஆனால். இந்த மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் பெரிய அளவில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. திருத்துறைப் பூண்டி முதல் திருவாரூர் வரை சாலை மற்றும் அனைத்து நெடுஞ்சாலை, தெரு சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் அனுமதி இல்லாமல் தொங்கவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்வாரிய கம்பங்களில்விளம்பர பதாகைகள் கட்டப்பட்டால் நிறுவனம் மற்றும் நபர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து 6 மாத சிறைத்தண்டனை வழங்கும் அளவுக்கு மின்வாரிய சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டிய மின்வாரியம் செயல்படாததால் விளம்பர பதாகைகளால் மின் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது.இது சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து நுகர்வோர் மையத்திற்கு புகார் வந்துள்ளது. திருவாரூர் கலெக்டர் உடனடியாக செயல்பட்டு மின்வாரிய மின்கம்பங்களில் தொங்க விடப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post தி.பூண்டி பகுதியில் அனுமதியின்றி மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் appeared first on Dinakaran.

Tags : D. Bundi ,Thiruthurapoondi ,Thiruvarur District Consumer Protection Center ,President ,Vakil Nagarajan ,
× RELATED திருவாரூர் கோடை மழைக்கு என்ன சாகுபடி...