பூலாம்பட்டி வடகத்திக்காடு கூட்டுறவு சங்கத்தில் ₹12 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

இடைப்பாடி, ஜூன் 25: பூலாம்பட்டி வடகத்திக்காடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 500 பருத்தி மூட்டை ₹12 லட்சத்திற்கு ஏலம் போனது. இடைப்பாடி அருகே கொங்கணாபுரம்-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கடன் சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. கூடக்கல், குப்பனூர், காசிக்காடு, ஓனாப்பாறை, வடகத்திக்காடு, பில்லுக்குறிச்சி, நாவிதன்குட்டை, காட்டூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500 மூட்டை பருத்திகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் பருத்தி ₹5379 முதல் 5699 வரை ஏலம் போனது. மொத்தம் ₹12 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தைவிட, ஒரு கிலோவிற்கு ₹2 முதல் 4 வரை கூடுதலாக ஏலம் போனது.Tags : Auction ,Poolampatti Vadakkadikkadu Co-operative Society ,
× RELATED ராசிபுரத்தில் ₹53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்