ஆத்தூர் அருகே கிடப்பில் போட்ட சாலை பணிகள்

ஆத்தூர், ஜூன் 25: ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் வழியில் சாலை சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டதால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.ஆத்தூர் அருகே தாண்வராயபுரம் கிராம ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தாண்டவராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு, ராசிபுரம் மெயின் ரோட்டிலிருந்து வரும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்க கோரி, பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டருக்கு, தபால் கார்டு மூலம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, சாலையை சீரமைக்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். இதனையடுத்து சாலையை சீரமைக்க, பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,Attur ,
× RELATED வில்லியனூர் மேலண்டை வீதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்