சோனா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

சேலம், ஜூன் 25: சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா முன்னிலை வகித்தார். முதல்வர் காதர்நாவஷ் வரவேற்றார். முன்னதாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், சமுதாய கல்வியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மையத்தின் நிறுவன இயக்குனருமான டாக்டர் சேவியர் அல்போன்ஸ், பெங்களூரு வெல்த்மேக்ஸ் எண்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.விழாவில் சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் பேசினர். விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags : Sona College ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்