எக்ஸல் கல்லூரியில் யோகா தினவிழா 300 ஆசிரியர்களுக்கு பயிற்சி

குமாரபாளையம், ஜூன் 25: எக்ஸல் கல்லூரியில் நடைபெற்ற யோகா தினவிழா நிகழ்ச்சியில் 300 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் தலைமை தாங்கி பேசினார். யோகா கல்லூரி முதல்வர் டாக்டர் விபாஷ் வரவேற்றார். எஸ்எஸ்எம் பள்ளி முதல்வர் மிராஸ்கரீம் சிறப்புரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சண்முகநாதன் யோகா பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார். டாக்டர் விபாஷ் குழுவினர் பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர். மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த பயிற்சியில் தேக பயிற்சி, மூச்சு பயிற்சி, தியானம் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. எக்ஸல் நிறுவனத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Tags : Yoga Festival ,teachers ,Excel College ,
× RELATED இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி