எம்ஜிஎம் பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

போச்சம்பள்ளி, ஜூன் 25: போச்சம்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினவிழா நடத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் பன்னீர் தலைமை வகித்தார். தாளாளர் மாதவிபன்னீர் முன்னிலை வகித்தார்.   முதல்வர் வைகுண்டரத்தினம் யோகா பயிற்சிகளை துவக்கி வைத்தார். ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்தனர். யோகா ஆசிரியை யாதிஸ்வரி கை, கண் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்து காண்பித்தார். தொடர்ந்து, யோகாவின் பயன்கள் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, சேர்மன் பன்னீர் பள்ளி குழந்தைகளுக்கு கூறினார். மாணவர்களுக்கு பல்வேறு வயது பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. இயக்குனர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.


× RELATED கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்