×

காரிமங்கலம், கடத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

காரிமங்கலம், ஜூன் 25:  காரிமங்கலம் மற்றும் கடத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பேரூராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது. காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேரி பேக்குகள் அதிகளவில் விற்பனையாவதாக புகார் எழுந்ததையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என 40 கிலோ கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இது பற்றி செயல் அலுவலர் ஆயிஷா கூறுகையில், ‘காரிமங்கலம் பேரூராட்சியில் அனைத்து கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,’ என்றார்.
கடத்தூர்: கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவளர் ராஜா ஆறுமுகம் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் கடத்தூரில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள், பேன்சி மற்றும் பேக்கரி கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, 7 கடைகளில் 4 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹1,700 அபராத தொகை விதிக்கப்பட்டது.



Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு