சாலையில் மயங்கி விழுந்து முதியவர் சாவு

கிருஷ்ணகிரி, ஜூன் 25: கந்திகுப்பம் அருகே உள்ள வரட்டனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வணங்காமுடி(68). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 19ம் தேதி மதியம் அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி வணங்காமுடி நேற்று உயிரிழந்தார்.


Tags : road ,
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி