×

குடிநீர் பிரச்னையை தீர்க்காத அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், குடிநீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்தும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி விலக கோரியும், சீரான முறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்பி சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்குட்டுவன் எம்எல்ஏ பேசுகையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை, அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லாததால், தற்போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில், இம்மாவட்டத்தில் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினாலே குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும்,’ என்றார். ஆர்ப்பாட்டத்தில், நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், ராஜேந்திரன், மதியழகன், பொன்.குணசேகரன், தம்பிதுரை, ராஜன், மங்கை கோவிந்தசாமி, செல்வம், சுவாமிநாதன், சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், கோவிந்தன், சுப்பிரமணி, கோவிந்தசாமி, பாபு, பாபுசிவக்குமார், பாலன், முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், கிருஷ்ணன், பன்னீர்செல்வம், ரஜினிசெல்வம், பரிதாநவாப், டாக்டர் மாலதி, நாராயணமூர்த்தி, வெங்கட்டப்பன், செந்தில், அஸ்லம், அமீன், துரைசாமி, திருமலைச்செல்வன், பாலாஜி, ஆறுமுகம், குப்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓசூர்: ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே, மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்ட்டத்தை, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு காவிரி தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தண்ணீர் பிரச்னையை தீர்க்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட நேரிடும்,’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் முருகன், சத்யா, அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாறன், வீராரெட்டி, சீனிவாசன், தனலட்சுமி, முனிராமைய்யா, சீனிவாசன், எல்லோரமணி, ராஜா, ஞானசேகரன், கோபாலகிருஷ்ணன், ஓசூர் சின்னபில்லப்பா, பேரிகை நாகேஷ், சூளகிரி வெங்கடேஷ், தளி சீனிவாசரெட்டி, திவாகர், கெலமங்கலம் கணேசன், குருசாமி, மாதேஸ்வரன், நடேசன், செந்தில்குமார், சரவணன், ராமு, சக்திவேல், ரவிகுமார், கருணாநிதி, சென்னீரப்பா, திம்மராஜ், நாகராஜ், சாந்தி, சுமன், ரத்தன்சிங், அருணாபூசன்குமார், முனிரத்னா, தனலட்சுமி பார்த்திபன், சுனந்தசுந்தர்ராஜ், சந்திரலேகா, பாலம்மாள், சரத்குமார், ஹரிபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,DMK ,government ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்