பூட்டியே கிடக்கும் கிராம சேவை மையம்

காரிமங்கலம், ஜூன் 25:  காரிமங்கலம் அருகே, பூட்டி கிடக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி பஞ்சாயத்து மாட்லாம்பட்டியில், கடந்த 2015ம் ஆண்டு ₹14.5 லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது, இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடரமாகி விட்டது. இது குறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, கிராம சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : Service Center ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு