நல்லம்பள்ளி அருகே விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

தர்மபுரி, ஜூன் 25:  நல்லம்பள்ளி அருகே, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் ராஐகோபால், ராஜூ, மாதையன், கிருஷ்ணன், முருகன், சாக்கன், ராமசந்திரன், மல்லையன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வறட்சி நிவாரண பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி, வரும் 3ம் தேதி மறியல் நடத்துவது என்றும், அதற்காக வரும் 25ம்தேதி கலெக்டரை சந்தித்து அறிவிப்பு மனு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக வறட்சி நிவாரண பணிகளை துவங்க வேண்டும். வறட்சி நிவாரணமாக விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். காய்ந்து போன தென்ணை மரம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ₹25 ஆயிரம் இழப்பீடு வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Agricultural Workers Union ,Nallampalli ,
× RELATED முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு