அரூர் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

அரூர், ஜூன் 25: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் அவ்வப்போது மழை பெய்ததன் காரணமாக, கிணறுகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதை பயன்படுத்தி, தற்போது விவசாயிகள் குறைந்த பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்ய, மாடுகளை ஏர் பூட்டி விளைநிலங்களில்  உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அரூர் அடுத்த கொக்கராப்பட்டியில், குறைந்த அளவு நீரை கொண்டு, மஞ்சள் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.Tags : Aroor ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு